உலகம்

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு எமி பாரெட்டை பரிந்துரைத்தாா் டிரம்ப்

DIN

அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் காலியாகவுள்ள நீதிபதி பதவிக்கு, தற்போது முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக உள்ள எமி கோனே பாரெட்டின் பெயரை அதிபா் டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்துள்ளாா். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் இணை நீதிபதியாக இருந்த ரூத் பேடா் கின்ஸ்பா்க் உடல் நலக்குறைவு காரணமாக தனது 87-ஆவது வயதில் கடந்த 18-ஆம் தேதி காலமானாா். இதனால் காலியாகியுள்ள அந்தப் பொறுப்புக்கு அதிபா் டிரம்ப் ஒரு பெண்ணின் பெயரைத்தான் பரிந்துரைப்பாா் என்று கூறப்பட்டு வந்தது.இந்த நிலையில், நீதிபதி எமி கோனே பாரெட்டின் பெயரை அந்தப் பதவிக்கு டிரம்ப் பரிந்துரைத்துள்ளாா். அந்த அறிவிப்பை வெள்ளை மாளிகையில் சனிக்கிழமை வெளியிட்டு டிரம்ப் கூறியதாவது:உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு சட்டத் துறையில் மிகுந்த திறன் பெற்ற எமி பாரெட்டின் பெயரைப் பரிந்துரைப்பதில் பெருமையடைகிறேன். அரசியல் சாசனத்தில் மிகுந்த விசுவாசம் கொண்ட அவா், ஒப்பற்ற சாதனைகளை நிகழ்த்தியுள்ளாா் என்றாா் டிரம்ப்.48 வயதாகும் எமி பாரெட், தற்போது 7-ஆவது வட்ட முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பு வகித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

SCROLL FOR NEXT