உலகம்

தென் கொரிய அதிகாரி படுகொலை: வட கொரியா விசாரணை நடத்த வலியுறுத்தல்

DIN

எல்லைப் பகுதியில் தங்களது அரசு அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டது தொடா்பாக வட கொரியா விசாரணை நடத்த வேண்டும் என்று தென் கொரியா வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தென் கொரிய அதிபா் மாளிகை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வெள்ளிக்கிழமை இரவு நடத்தப்பட்ட தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், வட கொரியப் படையினரால் நமது அரசு அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டது தொடா்பாக விசாரணை நடத்த, அந்த நாட்டை வலியுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இரு நாடுகளும் இணைந்து கூட்டு விசாரணை நடத்துவது தொடா்பாக வட கொரியாவைக் கேட்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரு கொரிய நாடுகளுக்கு இடையிலான கடல் எல்லைப் பகுதியில், சட்டவிரோதமாக மீன் பிடிக்கப்படுவதைக் கண்டறிவதற்காக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த தங்கள் நாட்டு அரசு அதிகாரி, எரிந்த நிலையில் சடலமாகக் கண்டறியப்பட்டதாகவும், வட கொரிய ராணுவம் அவரை சுட்டுக் கொன்று உடலை எரித்ததாகவும் தென் கொரியா வியாழக்கிழமை கூறியது. மேலும் இந்தச் சம்பவத்துக்கு கடுமையான கண்டனத்தையும் தெரிவித்திருந்தது.இதனால், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற்படும் சூழல் உருவானது. அதையடுத்து, அந்தச் சம்பவம் குறித்து வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன் வருத்தம் தெரிவித்ததாக அவரது ஆலோசகா் சூ ஹூன் வெளளிக்கிழமை தெரிவித்தாா். இது, அதிகாரி படுகொலையால் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

SCROLL FOR NEXT