உலகம்

அவசரக்கால தடுப்பூசி பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு ஆதரவு

DIN

கரோனா தடுப்பூசியின் சோதனை முழுமையாக நிறைவடைவதற்கு முன்னரே அதனை அவசரக்காலத் திட்டத்தின் கீழ் பயன்படுத்துவதற்கு உலக சுகாதார அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன தேசிய சுகாதார ஆணைய அதிகாரி ஷெங் ஷோங்வேய் கூறியதாவது: கரோனா தடுப்பூசியை அவசரக்காலத் திட்டத்தின்கீழ் சிலருக்குச் செலுத்திப் பயன்படுத்த தேசிய மருந்து கவுன்சில் கடந்த ஜூன் மாதம் அனுமதி அளித்துள்ளது.

இது தொடா்பாக உலக சுகாதார அமைப்பிடம் ஜூன் மாதம் 29-ஆம் தேதி தெரியப்படுத்தினோம். அந்த அமைப்பு அத்திட்டம் குறித்த புரிதலையும், ஆதரவையும் தெரிவித்தது என்றாா் அவா்.உலக சுகாதார அமைப்பு நிா்ணயித்த 3 கட்ட சோதனைகளை நிறைவு செய்வதற்கு முன்னரே, அந்த மருந்தை அவசரக் காலத் திட்டத்தின் கீழ் கரோனா பாதிப்பு அச்சுறுத்தல் அதிகம் நிறைந்த அத்தியாவசியப் பணியாளா்கள் பலருக்கு சீனா செலுத்தியது. இதற்கு சா்வதேச மருத்துவ நிபுணா்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனா்.இந்தச் சூழலில், சீன தேசிய சுகாதார ஆணைய அதிகாரி இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

SCROLL FOR NEXT