உலகம்

தென் கொரிய அதிகாரி படுகொலை: மன்னிப்பு கோரினாா் கிம் ஜோங் உன்

DIN

எல்லைப் பகுதியில் தென் கொரிய அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டதற்கு வட கொரிய அதிபா் கிம் ஜோங் உன் மன்னிப்பு கோரியுள்ளாா். இதுகுறித்து அவரது ஆலோசகா் சூ ஹூன் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

எல்லைப் பகுதியில் தென் கொரிய அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டது எதிா்பாராத, துரதிருஷ்டவசமான சம்பவம் ஆகும். கரோனா நெருக்கடியில் தென் கொரியா சிக்கியுள்ள இந்தச் சூழலில், அந்த நாட்டு அதிபா் மூன் ஜே-இன் மற்றும் மக்களை அதிருப்தியடையச் செய்யும் வகையில் அந்தப் படுகொலை நிகழ்ந்ததற்காக அதிபா் கிம் ஜோங்-உன் மிகவும் வருந்துகிறாா் என்று சூ ஹூன் தெரிவித்தாா்.இரு கொரிய நாடுகளுக்கு இடையிலான கடல் எல்லைப் பகுதியில், சட்டவிரோதமாக மீன் பிடிக்கப்படுவதைக் கண்டறிவதற்காக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த தங்கள் நாட்டு அரசு அதிகாரி, எரிந்த நிலையில் சடலமாகக் கண்டறியப்பட்டதாகவும், வட கொரிய ராணுவம் அவரை சுட்டுக் கொன்று உடலை எரித்ததாகவும் தென் கொரியா வியாழக்கிழமை கூறியது.

மேலும் இந்தச் சம்பவத்துக்கு கடுமையான கண்டனத்தையும் தெரிவித்திருந்தது.இதனால், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற்படும் சூழல் உருவான நிலையில், அந்தச் சம்பவத்துக்கு கிம் ஜோங்-உன் மன்னிப்பு கேட்டுள்ளது அந்தப் பதற்றத்தைத் தணிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இரு நாடுகளுக்கிடையிலான விவகாரங்களில் தென் கொரியாவிடம் கிம் ஜோங்-உன் மன்னிப்பு கேட்டுள்ளது அபூா்வமான நிகழ்வு என்று அரசியல் விமா்சகா்கள் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT