உலகம்

இந்தியா - இலங்கை இடையே இன்று காணொலி மாநாடு

DIN

இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உச்சி மாநாடு காணொலி காட்சி வாயிலாக இன்று நடைபெறவுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரதமர் மகிந்த ராஜபட்ச உடன் காணொலி காட்சி வாயிலாக இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். இதனை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது.

இதில் இரு நாட்டு உறவுகளை கட்டமைப்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருதரப்பு ஒத்துழைப்பையும் அனைத்துத் தளங்களிலும் விரிவுபடுத்துவது தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதில் இருநாட்டு பிரதமர்களுடன் அதிகாரிகளும் கலந்துகொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பிரதமர் பதவிக்கான தேர்தல் முடிந்து முதன்முறையாக ராஜபட்ச இந்தியாவுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் இலங்கை பிரதமர் ராஜபட்ச இந்தியாவிற்கு வந்து சென்ற பிறகு முதன்முறையாக அதிகாரப்பூர்வமான ஆலோசனை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT