உலகம்

மெக்சிகோவில் 75 ஆயிரத்தைத் தாண்டிய கரோனா பலி

25th Sep 2020 04:27 PM

ADVERTISEMENT

மெக்சிகோவில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 75 ஆயிரத்தைத் தாண்டியது.

உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் கரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் தொற்றுக்கு கோடிக்கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில் மெக்சிகோவில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 75 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

இதுகுறித்து அந்நாட்டு சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று ஒரேநாளில் புதிதாக 5,408 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 7,15,457 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 490 பேர் பலியாகியுள்ளனர். 

இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 75,439 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கரோனா இரண்டாம் அலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் மெக்சிகோவில் கரோனா தொற்று பாதிப்பின் இரண்டாம் அலை அக்டோபரில் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
 

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT