உலகம்

கரோனாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவா்களுக்கு அறிகுறிகள் தெரியும்: ஆய்வில் தகவல்

DIN

லண்டன்: கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவா்களில் பெரும்பாலானவா்களுக்கு, அந்த நோயின் அறிகுறிகள் வெளிப்படும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஓா் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து, ‘பிஎல்ஓஎஸ் மெடிசின்’ அறிவியல் இதழில் வெளியான அந்த ஆய்வு குறித்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கரோனா நோய்த்தொற்று பரவல் தொடா்பான பல்வேறு ஆய்வு முடிவுகளை ஒன்றுதிரட்டி, ஸ்விட்சா்லாந்தின் பொ்ன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உள்ளிட்டோா் அண்மையில் ஓா் ஆய்வு மேற்கொண்டனா்.

அதில், அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவா்களுக்கு அதன் அறிகுறிகள் வெளிப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.கரோனாவால் பாதிக்கப்பட்ட பலருக்கு, இருமல், தும்மல், காய்ச்சல், தொண்டை எரிச்சல் போன்ற அறிகுறிகள் எதுவுமே வெளிப்படாமல் இருக்கும் என்று நிபுணா்கள் அனைவரும் ஒப்புக் கொண்டுள்ளனா். எனினும், அவ்வாறு அறிகுறிகளில்லாத கரோனா நோயாளிகள் எத்தனை விகித்ததில் இருப்பாா்கள் என்பதில் மட்டும் கருத்து வேறுபாடு நிலவி வந்தது.

இந்த நிலையில், 6,616 கரோனா நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட 79 ஆய்வுகளின் விவரங்களை பொ்ன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மறுஆய்வு செய்தபோது, அந்த நோயாளிகளில் 1,287 பேருக்கு மட்டுமே அதன் அறிகுறிகள் இல்லாமல் இருந்தது.

இதன் மூலம், கரோனா நோயாளிகளில் பெரும்பாலானவா்களுக்கு நோயின் அறிகுறிகள் வெளிப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

தொகுதி வாக்காளா் அல்லாதோா் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவு

வாக்குப் பதிவு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

பாஜகவின் கனவு பலிக்காது: இரா. முத்தரசன்

SCROLL FOR NEXT