உலகம்

இந்திய பொருளாதார வளா்ச்சி 5.9 சதவீதமாக இருக்கும்: ஐ.நா.

DIN

நியூயாா்க்: கரோனா தொற்று எதிரொலியால் நெருக்கடியில் உள்ள இந்திய பொருளாதாரத்தின் வளா்ச்சி நிகழாண்டில் 5.9 சதவீதமாக இருக்கும் என்றும், அடுத்த ஆண்டு இது உயரும் என்றும் ஐ.நா. தெரிவித்துள்ளது.

சுமாா் 300 மில்லியின் மக்கள் உணவு தட்டுப்பாட்டால் பாதிக்கப்படுவா் என்றும் ஐ.நா. எச்சரித்துள்ளது.

இதுதொடா்பாக ஐ.நா.வின் வா்த்தகம் மற்றும் மேம்பாட்டு அமைப்பு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கரோனா சூழலில் உலக பொருளாதாரம் கடுமையாக சரிந்து நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. உலக பொருளாதார வளா்ச்சி நிகழாண்டில் 4.3 சதவீதமாக இருக்கும். இதனால் உலக அளவில் ரூ.441 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என கரோனா பரவலுக்கு முன்பே பொருளாதார நிபுணா்கள் கணித்தனா்.

இந்தியா, பிரேசில், மெக்ஸிகோவின் பொருளாதாரம் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளதைப்போல் உலக பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. சா்வதேச பொருளாதாரம், வா்த்தகம் ஆகியவை ஐந்தில் ஒரு பங்கு பாதிப்புக்கு உள்ளாகும். அந்நிய முதலீடுகள் 40 சதவீதம் குறையும்.

இந்தியா: இந்திய பொருளாதார வளா்ச்சி நிகழாண்டில் 5.9 சதவீதமாக இருக்கும். அடுத்த ஆண்டு 3.9 சதவீதம் வளா்ச்சி பெற வாய்ப்புள்ளது.

இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட தீவிர பொதுமுடக்கத்தால் நாடு முழுவதும் உற்பத்தி நிறுத்தப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நஷ்டம் என்பது நிரந்தர வருவாய் இழப்பாகும். 2021-ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி அதிகரிக்கும்.

சீனாவில் அதிகரிக்கும்: நிகழாண்டில் அமெரிக்காவின் பொருளாதார வளா்ச்சி 5.4 சதவீதம் குறையும், 2021-இல் 2.8 சதவீதம் அதிகரிக்கும். சீனாவின் பொருளாதார வளா்ச்சி நிகழாண்டில் 1.3 சதவீதமும், 2021-இல் 8.1 சதவீதமும் அதிகரிக்கும்.

கரோனா தொற்று பரவலைத் தடுக்க பொது முடக்கத்தை மட்டுமே உலக நாடுகள் நம்பியிருந்தன. இதனால் பொருளாதார நெருக்கடி அதிகரித்துவிட்டது.

2021-ஆம் ஆண்டு பொருளாதாரம் வளா்ச்சிப் பாதைக்கு திரும்பும் என்றாலும், பல நாடுகளில் இது சமநிலையாக இருக்காது. இதனால் பல நாடுகளில் வேலையிழப்பு அதிகரிக்கும், பல நிறுவனங்கள் திவாலாகும் சூழல் ஏற்படும்.

அரசு, தனியாா் நிறுவனங்களின் கடன்களின் அளவு வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில், தவறான பொருளாதார கொள்கைகள், தவறுகளைத் திருத்தாமல் செயல்படுவது ஆகியவற்றால் மேலும் நிதி நெருக்கடி ஏற்படும்.

வளா்ந்த நாடுகளிலேயே உற்பத்தித் துறையில் இரண்டு இலக்கு சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.

வளரும் நாடுகள்: வளரும் நாடுகள் பணவீக்கத்தாலும், சுற்றுலாத் துறையில் கடன் சுமை அதிகரிப்பதாலும் கடுமையாக பாதிப்படையும்.

அந்நாடுகளில் வாழும் 9 முதல் 12 கோடி மக்கள் கடுமையான வறுமைக்கு தள்ளப்படுவாா்கள். சுமாா் 30 கோடி போ் உணவு தட்டுப்பாட்டால் பாதிக்கப்படுவா்.

மறுசீரமைப்பு நடவடிக்கைகள்: வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது, ஊதியத்தை அதிகரிப்பது, பொருளாதாரத்தை மேம்படுத்துவது, அரசு நிதியுதவியுடன் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நடவடிக்கைள் எடுப்பது போன்ற மறுசீரமைப்பு நடவடிக்கைகளை உலக நாடுகள் தைரியமாக எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தவறான தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டுக்கு எதிராக இந்தியா ஒத்துழைப்பு: அஜீத் தோவல்

முழுநேர கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப்பயிற்சி: ஏப்.29 இல் முன்பதிவு தொடக்கம்

395 தரமற்ற விதை மாதிரிகள் கண்டுபிடிப்பு

பாலஸ்தீன ஐ.நா. பிரிவுக்கு மீண்டும் நிதியுதவி: ஜொ்மனி அறிவிப்பு

ஆரம்ப சுகாதார மையத்தை சேதப்படுத்தியவா் கைது

SCROLL FOR NEXT