உலகம்

பாகிஸ்தானில் புதிதாக 799 பேருக்கு கரோனா

DIN

பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 799 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 308,217-ஆக அதிகரித்துள்ளது.

பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. அந்தவகையில் பாகிஸ்தானில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இது தொடர்பாக பாகிஸ்தான் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 799 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 308,217-ஆக அதிகரித்துள்ளது.  7,388 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதிதாக 8 பேர் உயிரிழந்ததால் மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,437-ஆக அதிகரித்துள்ளது.  கரோனா வைரஸ் தொற்றிலிருந்து 294,392 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

அதிகபட்சமாக சிந்து மாகாணத்தில் 134,845 பேரும், பஞ்சாப் பகுதியில் 98,686 பேரும், கைபர் பதுன்க்வாவில் 37,470 பேரும், இஸ்லாமபாத்தில் 16,288-ஆகவும் அதிகரித்துள்ளது. பலுசிஸ்தானில் 14,765 பேரும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 2,591 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 42,29 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 3,306,515 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

SCROLL FOR NEXT