உலகம்

கரோனாவை மறைக்க உதவிய உலக சுகாதார நிறுவனம்: சீன வைராலஜிஸ்ட் குற்றச்சாட்டு

23rd Sep 2020 07:38 PM

ADVERTISEMENT

கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து சீன அரசைக் குற்றம்சாட்டி வந்த வைராலஜிஸ்ட் லீ மெங் யான் உலக சுகாதார நிறுவனம் சீனாவிற்கு உதவியதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்துள்ள கரோனா வைரஸ் தொற்று குறித்து சீன அரசு மீது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இத்தகைய சூழலில் கடந்த சில தினங்களுக்கு சீனாவைச் சேர்ந்த வைராலஜிஸ்ட் லீ மெங் யான் என்பவர் கரோனா வைரஸ் வூஹான் மாகாண ஆராய்ச்சிக் கூடத்தில் உருவாக்கப்பட்டதாக பரபரப்பைக் கிளப்பி இருந்தார்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இதுகுறித்து பேசிய லீ மெங் யான், கரோனா வைரஸ் குறித்து உலகத்திற்கு தெரிவதற்கு முன்பே சீன அரசு அதனைக் குறித்து அறிந்திருந்ததாகவும், உலக சுகாதார நிறுவனம் இதனை மறைக்க சீன அரசாங்கத்திற்கு உதவியதாகவும் தெரிவித்துள்ளார். 

சீன அரசு மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் லீ மெங் யான் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT