உலகம்

உலகளவில் கரோனா பாதிப்பு 3.17 கோடியைத் தாண்டியது!

DIN

உலகளவில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.17 கோடியை எட்டியுள்ளது. 

உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள/ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றுக்கு கோடிக்கணக்கான மக்கள் ஆளாகியுள்ளனர். இன்றைய நிலவரப்படி உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,17,75,937 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9,75,465 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனா பாதித்த 3 கோடி பேரில் 2,33,94,782 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது 74,05,690 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 62,077 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். 

உலகளவில் கரோனா பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 70,97,937 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,05,471 பேர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து இந்தியா, பிரேசில், ரஷியா நாடுகள் முறையே கரோனா பாதிப்பில் 2 ஆம், 3 ஆம் மற்றும் 4 ஆம் இடங்களில் உள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT