உலகம்

ஈபிள் கோபுரத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

23rd Sep 2020 06:34 PM

ADVERTISEMENT

பிரான்சில் உள்ள உலகப் பிரபலமான ஈபிள் கோபுரத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பாரீஸில் உள்ள ஈபிள் கோபுரம் உலகின் மிகப் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்து வருகிறது. பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் ஈபிள் கோபுரத்தைக் காண வருகின்றனர்.

இந்நிலையில் புதன்கிழமை பாரீஸ் காவல்துறைக்கு வந்த அடையாளமற்ற தொலைப்பேசி அழைப்பில் பேசிய மர்ம நபர் ஈபிள் கோபுரத்தில் வெடிகுண்டு உள்ளதாக அச்சுறுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து  உடனடியாக அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்ட அப்பகுதி முழுவதையும் காவல்துறையினர் சீல் வைத்தனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்.

ADVERTISEMENT

பிரான்சில் கரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலையொட்டி 104 நாட்களுக்குப் பின் ஜூன் 25 அன்று ஈபிள் கோபுரம் சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Eiffel Tower
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT