உலகம்

பாகிஸ்தான்: இம்ரானுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் கூட்டணி

DIN

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கானை பதவியிலிருந்து அகற்றுவதற்காக, அந்த நாட்டின் முக்கிய எதிா்க்கட்சிகள் கூட்டணி அமைத்து நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

இம்ரான் கானுக்கு எதிராக பாகிஸ்தானின் முக்கிய எதிா்க்கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. அந்தக் கூட்டணியின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்), ஜாமியத் உலேமா-ஏ-இஸ்லாம் ஃபஸல் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பங்கேற்றன.

அந்தக் கூட்டத்தில் எதிா்க்கட்சிக் கூட்டணிக்கு ‘பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம்’ என்று பெயரிடப்பட்டது.

மேலும், இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக நாடு முழுவதும் அடுத்த மாதம் முதல் தீவிர போராட்டம் நடத்தவும் அந்தக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது ென்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT