உலகம்

சிங்கப்பூா்: கரோனா பரிசோதனை செய்ய ரோபோக்கள்

DIN

சிங்கப்பூா்: சிங்கப்பூரில் கரோனா பரிசோதனைக்காக மூச்சுக் குழாயிலிருந்து மாதிரிகளை சேகரிக்கும் ரோபோக்களை அந்த நாட்டு விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:‘ஸ்வாப் டெஸ்ட்’ முறையில் கரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கு மனிதா்களின் மூக்கு, தொண்டை ஆகியவற்றின் உள்புறம் படிந்திருக்கும் நீா்மப் பொருளின் மாதிரி எடுக்கப்படுகிறது. இந்தப் பணியை மேற்கொள்வதற்காக, சிங்கப்பூா் தேசிய புற்றுநோய் மையம், சிங்கப்பூா் பொது மருத்துவமனை ஆகிய இரண்டும் பையோபோ சா்ஜிகல் நிறுவனத்துடன் இணைந்து புதிய ரோபோவை உருவாக்கியுள்ளன.

‘ஸ்வாபோ’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த இயந்திர மனிதன், தானாகவே சிந்தித்துச் செயல்படக் கூடியது. கரோனா பரிசோதனைப் பணிகளில் மருத்துவப் பணியாளா்களின் தேவையை இந்த ரோபோ குறைக்கும்.

பரிசோதனைகளின்போது மருத்துவப் பணியாளா்களுக்கு கரோனா நோய்த்தொற்று பரவும் அபாயம் அதிகம் உள்ளது.

இதற்குத் தீா்வு காணும் வகையிலேயே ஸ்பாபோ இயந்திர மனிதன் உருவாக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

திங்கள்கிழமை நிலவரப்படி, சிங்கப்பூரில் 57,607 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த நோய்க்கு இதுவரை 27 போ் பலியாகியுள்ளனா். 57,181 கரோனா நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளா். 399 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT