உலகம்

இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரு அரிய வகை காண்டாமிருகங்கள்

DIN

இந்தோனேசியாவின் சரணாலயத்தில் உலகின் மிகவும் அரிய வகையைச் சேர்ந்த இரண்டு  காண்டாமிருகங்கள் கண்டறியப்பட்டது வன ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் அதிகரித்து வரும் வன விலங்குகளின் மீதான வேட்டையாடுதலால் அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் பல வன விலங்குகள் அழிவின் விளிம்பில் உள்ளன.

இந்நிலையில் இந்தோனேசியாவின் தேசிய பூங்காவில் மிகவும் அரிதான இரண்டு ஜவான் காண்டாமிருகக் குட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்தோனேசியாவில் உள்ள பான்டன் மாகாணத்தில் உஜுங்குலோன் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்தில் சுமார் 5,100 ஹெக்டேர் (12,600 ஏக்கர்) பசுமையான மழைக்காடுகள் மற்றும் நன்னீர் ஓடைகள் உள்ளன. மார்ச் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் உஜுங் குலோன் தேசிய பூங்காவில் நிறுவப்பட்ட கிட்டத்தட்ட 100 கேமராக்களில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகளில் 2 காண்டாமிருகக் குட்டிகள் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

"இந்த குட்டிகள் ஆபத்தான சிறப்பு ஜவான் காண்டாமிருகத்தின் தலைமுறையைத் தொடரும் என்ற ஒரு பெரிய நம்பிக்கையைத் தருகின்றன" என்று சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மூத்த அதிகாரி விராட்னோ தெரிவித்துள்ளார்.

ஜவான் காண்டாமிருகங்கள் தளர்வான தோலின் மடிப்புகளைக் கொண்டிருக்கும். ஒரு காலத்தில் தென்கிழக்கு ஆசியா முழுவதும் ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் இருந்த இவை பரவலான வேட்டையாடுதல் மற்றும் மனிதர்கள் அத்துமீறல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT