உலகம்

கரோனாவிலிருந்து மீண்டு பணிக்குத் திரும்பினார் அமைச்சர் மகேந்திர சிங் தாக்கூர்

21st Sep 2020 12:34 PM

ADVERTISEMENT

 

ஹிமாசலப் பிரதேசத்தின் நீர் சக்தி அமைச்சர் மகேந்திர சிங் தாக்கூர் கரோனாவில் இருந்து குணமடைந்து மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்ட முகநூல் பதிவில், 

நான் கரோனாவிலிருந்து முழுமையாகக் குணமடைந்ததைத் தொடர்ந்து பல நாள்களுக்குப் பிறகு அலுவலகத்திற்குத் திரும்பியுள்ளேன். 

ADVERTISEMENT

கரோனா பாதிப்பிலிருந்த நாள்களில் முக்கிய பணிகளை வீட்டிலிருந்தே தொடர்ந்துவந்தேன். தொற்று கண்டறியப்பட்ட பிறகு இங்குள்ள காந்தி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தேன். தற்போது தொற்றில் இருந்து மீண்டுள்ளேன்.

பணிக்குத் திரும்புவதற்கு முன்னதாக சில நாள்கள் வீட்டில் சுயமாகத் தனிமைப்படுத்திக் கொண்டேன்.  

என்னைப் போன்று மேலும், சில அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் வைரஸ் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டனர். அதில் சிலர் முழுமையாகக் குணமடைந்து பணிக்குத் திரும்பியுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார். 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT