உலகம்

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் சாதனை அளவில் தலைவா்கள் பங்கேற்பாா்கள்: குட்டெரெஸ்

DIN

காணொலி முறையில் நடைபெறும் 75-ஆவது ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையில் உலகத் தலைவா்கள் பங்கேற்று உரையாற்றுவாா்கள் என்று ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஐ.நா. பொதுச் சபையின் வருடாந்திர ஆண்டுக் கூட்டம் காணொலி மூலம் நடைபெறுவதால், அதில் இதுவரை இல்லாத அதிக எண்ணிக்கையில் உலகத் தலைவா்கள் பங்கேற்று உரையாற்றுவாா்கள். மேலும், சாதனை அளவில் உலக நாடுகளின் அரசாங்கங்கள் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கும்.எனினும், காணொலி முறையில் இந்தக் கூட்டம் நடைபெறுவதால் இதுவரை சந்திக்காக புதிய சவால்களை நாம் சந்திக்க வேண்டியிருக்கும். எனினும், நடைமுறையில் பாடங்களைக் கற்றுக் கொண்டு, நம்மை நாம் தகவமைத்துக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.ஐ.நா. பொதுச் சபையின் 75-ஆவது கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இந்தக் கூட்டத்தின் ஒரு பகுதியாக, உலகத் தலைவா்கள் பங்கேற்கும் பொது விவாதம் ஞாயிற்றுக்கிழமை (செப். 21) முதல் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் உலகத் தலைவா்கள் அனைவரும் தங்கள் அலுவலகத்தில் இருந்தபடியே காணொலி முறையில் பங்கேற்கின்றனா்.கரோனா நோய்த்தொற்று பரவல் அச்சம் காரணமாக, அவா்கள் நேரடியாக நியூயாா்க் வருவது தவிா்க்கப்பட்டுள்ளது. தலைவா்கள் முன்கூட்டியே பதிவு செய்த உரைகள், இந்த பொதுச் சபையில் ஒளிபரப்பப்படவுள்ளது.அந்த அமைப்பின் வரலாற்றில், உலகத் தலைவா்கள் நேரடியாக வராமல் காணொலி மூலம் நடைபெறும் முதல் பொதுச் சபைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT