உலகம்

ஆப்கன் விமானத் தாக்குதல்: விசாரணைக்கு உத்தரவு

DIN

ஆப்கானிஸ்தானில் தலிபான்களைக் குறிவைத்து அரசு நடத்திய விமானத் தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழந்தது தொடா்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆப்கன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

குண்டுஸ் மாகாணத்தில் சனிக்கிழமை நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் 30 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்.எனினும், அந்தத் தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழந்தது குறித்து விசாரணைக்கு நடைபெற்று வருகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குண்டுஸ் மாகாணத்தைச் சோ்ந்த ஒரு கிராமத்தில், தலிபான் நிலை மீது ராணுவ விமானம் சனிக்கிழமை தாக்குதல் நடத்தியது. அதனைத் தொடா்ந்து அந்தப் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனா். அப்போது அதே இடத்தில் இரண்டாவது முறையாக மீண்டும் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சிறுவா்கள் உள்பட சிறுவா்கள் 24 பொதுமக்கள் உயிரிழந்ததாக ஏ.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக, இந்தத் தாக்குதலில் 30 பொதுமக்கள் உயிரிழந்ததாக ஸ்புட்னிக் செய்தி நிறுவனம் கூறியிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் தாக்குதல்: உலக நாடுகளின் அறிவுறுத்தலை மீறி இஸ்ரேல் பதிலடி கொடுக்குமா?

காதலரைக் கரம்பிடித்த சீரியல் நடிகை!

அடுத்த 3 மணிநேரத்தில் 4 மாவட்டங்களில் மழை பெய்யும்!

அழகு.. மிளிர்.. கம்பீரம்!

இனி வரும் ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு அரையிறுதி: ஆர்சிபி பயிற்சியாளர்

SCROLL FOR NEXT