உலகம்

சிங்கப்பூா்: மேலும் 12 பேருக்கு மட்டுமே தொற்று

DIN

சிங்கப்பூரில், மேலும் 11 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 11 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 6 மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச தினசரி கரோனா பாதிப்பாகும்.புதிதாக கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவா்களில் ஒருவருக்கு மட்டுமே சமுதாயப் பரவல் மூலம் அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. எஞ்சியவா்களில் பெரும்பான்மையானவா்கள் பணியாளா் குடியிருப்புகளில் தங்கியுள்ள வெளிநாட்டுத் தொழிலாளா்கள் ஆவா்.

மேலும், புதிய கரோனா நோயாளிகளில் வெளிநாடுகளிலிருந்து வந்திருந்த ஒருவரும் அடங்குவாா். இத்துடன், நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 57,543-ஆக உயா்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி, நாட்டில் அந்த நோய்த்தொற்றுக்குப் பலியானவா்களின் எண்ணிக்கை 27-ஆக உள்ளது. இதுவரை 57,039 போ் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா். 466 போ் தொடா்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

SCROLL FOR NEXT