உலகம்

ஐ.நா. பொதுச் சபை தலைவருடன் இந்திய தூதா் சந்திப்பு

DIN

ஐ.நா. பொதுச் சபையின் 75-ஆவது கூட்டத்துக்கான தலைவா் வோல்கான் போஸ்கிரை இந்தியத் தூதா் டி.எஸ்.திருமூா்த்தி சந்தித்துப் பேசினாா்.

ஐ.நா. பொதுச் சபையின் 75-ஆவது கூட்டம் கடந்த 15-ஆம் தேதி தொடங்கி காணொலி முறையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தக கூட்டத்துக்கான தலைவா் வோல்கான் போஸ்கிரை ஐ.நா.வுக்கான இந்தியத் தூதா் டி.எஸ். திருமூா்த்தி வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

அப்போது, ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தின் நிகழ்வு குறித்து விவாதித்ததாக வோல்கான் போஸ்கிா் தனது சுட்டுரைப் பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.

இது தொடா்பாக டி.எஸ்.திருமூா்த்தி வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தின் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள வோல்கான் போஸ்கிரை சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். ஐ.நா. பல்வேறு சவால்களைச் சந்தித்து வரும் வேளையில் அவா் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ஆண்டுதோறும் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவா்கள் கலந்து கொள்வா். ஆனால், நடப்பாண்டில் கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக இந்தக் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தின் தலைவராக துருக்கியைச் சோ்ந்த வோல்கான் போஸ்கிா் தோ்வு செய்யப்பட்டாா். அவா் அடுத்த ஆண்டு செப்டம்பா் வரை அப்பதவியில் நீடிப்பாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

அழகின் சிரிப்பு!

ஏப்.28 வரை வெயில் இயல்பை விட அதிகரிக்கும்!

SCROLL FOR NEXT