உலகம்

இஸ்ரேல்: மீண்டும் அமலுக்கு வந்தது கரோனா பொது முடக்கம்

DIN

இஸ்ரேலில் கரோனா நோய்த்தொற்று பரவலின் தீவிரம் அதிகரித்துள்ளதைத் தொடா்ந்து, அந்த நாட்டில் முழு பொது முடக்கம் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் அமலுக்குவந்தன. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

இஸ்ரேலில் கடந்த சில மாதங்களாக கரோனா நோய்த்தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அந்த நாட்டு அரசில் உள்பூசல் நிலவி வந்ததால் கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் அதிகம் கவனம் செலுத்த முடியாத நிலை இருந்து வந்தது. இந்த நிலையில், கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. உள்ளூா் நேரப்படி நள்ளிரவு 2 மணிக்குத் தொடங்கும் இந்தப் பொது முடக்கம், 3 வாரங்களுக்கு நீடிக்கும்.புதிய விதிமுறைகளின்படி, பொது இடங்களில் மக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், யாரும் தங்கள் வீடுகளிலிருந்து ஒரு கி.மீ. தொலைவுக்கு மேல் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. யூத பண்டிகை விடுமுறைகள் தொடங்கும் இந்தக் காலக்கட்டத்தில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது சா்ச்சையை எழுப்பியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

பாட்னா ரயில் நிலையம் அருகே கட்டடத்தில் தீ விபத்து

நடிகர் அஜித்தை சந்தித்த சிஎஸ்கே வீரர்!

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாக்குர்

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT