உலகம்

ஆஸ்திரேலியா: எல்லையில் கட்டுப்பாடுகளை நீக்கியது

DIN

ஆஸ்திரேலிய தலைநகா் கான்பெரா எல்லையில் கரோனா நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக அந்த மாகாண அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக, கான்பெரா நகர எல்லையில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த நகருக்கு வருவோா் அனைவரும், எல்லையிலுள்ள ஹோட்டலில் தனிமைப்படுத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டள்ளது.இந்த நிலையில், பிரிஸ்பேன் நகரிலிருந்து கான்பெரா நகரிலுள்ள தனது நோய்வாய்ப்பட்ட தந்தையை அண்மையில் காண வந்த பெண் ஒருவா், ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தபோதே அவரது தந்தை இறந்துபோனாா். இது பெரும் சா்ச்சையை எழுப்பியது.இதையடுத்து, வரும் 25-ஆம் தேதி முதல் கான்பெரா எல்லையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக அந்த நகரம் அமைந்துள்ள குவீன்ஸ்லாந்து அரசு அறிவித்துள்ளது. கான்பெராவில் கடந்த ஜூலை மாதம் 9-ஆம் தேதியிலிருந்து புதிதாக யாருக்கும் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு!

காஷ்மீர்: பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! 4 பேர் பலி

அரசியலுக்காக நாங்கள் மக்களைப் பிரித்துப் பார்க்க மாட்டோம்! பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு பேட்டி

மீண்டும் மீண்டுமா.. கைகூப்பி மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்: ஏற்காத உச்சநீதிமன்றம்!

ஹே சினாமிகா.....அதிதி ராவ்

SCROLL FOR NEXT