உலகம்

பிரிட்டனில் கரோனா 2ஆம் அலைக்கு வாய்ப்பு: பிரதமர் போரிஸ் ஜான்சன்

DIN

பிரிட்டன் கரோனா 2ஆம் அலையை எதிர்நோக்கி இருப்பதாக அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. கணிக்கமுடியாத வகையில் திடீரென தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்வது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில் பிரிட்டனில் கரோனா பாதிப்பின் 2ஆம் அலைக்கு வாய்ப்பிருப்பதாக அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் சனிக்கிழமை தெரிவித்தார். 

ஆக்ஸ்போர்டுக்கு அருகிலுள்ள டிட்காட்டில் ஒரு புதிய தடுப்பூசி மையத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஜான்சன், “பல வாரங்களாக நான் சொன்னது போல் இப்போது கரோனா இரண்டாவது அலை வருவதை நாம் காண்கிறோம். நான் பயப்படுகிறேன். இதனைத் தவிர்க்க முடியாது. நாம் அதைப் பார்க்கப் போகிறோம்." எனத் தெரிவித்தார்.

பிரிட்டனில் தற்போது வரை 3 லட்சத்து 85 ஆயிரத்து 936 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT