உலகம்

பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு 3,05,031 ஆக அதிகரிப்பு: இன்று 645 பேருக்குத் தொற்று

PTI

பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,05,031 ஆக அதிகரித்துள்ளது. 

இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 645 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதையடுத்து, நாட்டின் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,05,031 ஆக உயா்ந்துள்ளது. 

இதுதவிர, அந்த நோய்க்கு மேலும் 7 போ் பலியாகினா். இதன் காரணமாக, கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,415-ஆக அதிகரித்துள்ளது. 

இதுவரை அந்த நோயால் பாதிக்கப்பட்ட 2,92,044 போ் குணமடைந்துள்ளனா். 6,572 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

நாட்டிலேயே அதிகபட்சமாக சிந்து மாகாணத்தில் 1,33,362 பேருக்கும், அதற்கு அடுத்தபடியாக பஞ்சாப் மாகாணத்தில் 98,272 பேருக்கும் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. 

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 35,720 சோதனைகள் மேற்கொண்ட நிலையில், மொத்த அந்த நாட்டில் 3,23,6,380 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் கொடியேற்றம்!

பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கும் அளவில் மன்னிப்பு விளம்பரம்: உச்ச நீதிமன்றம் கண்டனம்

இது சஹீரா வைப்ஸ்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண் கொலை?

தக் லைஃப் படப்பிடிப்பில் சிம்பு!

SCROLL FOR NEXT