உலகம்

வியத்நாமில் நிலச்சரிவு: கம்போடியாவில் மின்னல் தாக்கி 7 பேர் பலி

19th Sep 2020 11:31 AM

ADVERTISEMENT

தென்கிழக்கு ஆசிய நாடுகளான வியத்நாம் மற்றும் கம்போடியாவில் தொடர் மழையால் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனிடையே பட்டம்பாங் மாகாணத்தில் நேற்று இரவு மின்னல் தாக்கியது. 
இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும், உறவினர்கள் 3 பேரும் உயிரிழந்தனர். இதனை வியட்நாம் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

வியத்நாமில் புயல் தாக்கியதில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. வியட்நாமில் உருவாகியுள்ள புதிய புயலால் தொடர் கனமழை பெய்து வருகிறது. 

கடலோர மாகாணங்கலில் அதிவேகத்துடன் காற்று வீசுவதாலும், மழையாலும் ஏராளமான பகுதிகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தும், வீடுகளின் மேற்கூறைகள் சேதமடைந்துள்ளன.

ADVERTISEMENT

ஹுயூ மாகாணத்தில் மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மழையால் ஏற்பட்ட சேதங்களில் சிக்கி இதுவரை 23 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வியத்நாமில் தாழ்வான பகுதிகளிலிருந்து சுமார் 60,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT