உலகம்

உலக அளவில் கரோனா பாதிப்பு 3.06 கோடி: பலி 9.56 லட்சமாக உயர்வு

DIN

கடந்த 9 மாதங்களாக உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றுக்கு தடுப்பூசிகள் எதுவும் வெளிவராத நிலையில், அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளில் தொற்று பரவல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடான அமெரிக்கா விழி பிதுங்கி நிற்கின்றன. 

இந்நிலையில், சனிக்கிழமை காலை நிலவரப்படி, உலக அளவில் மொத்த கரோனா பாதிப்பு 3,06,91,801 கோடியைத் தாண்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 74,00,874 பேர் கரோனா தொற்றுக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரத்தில் தொற்று பாதிப்புக்கு இதுவரை 956,421 பேர் உயிரிழந்துள்ளனர், 2,23,34,506 பேர் கரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 61,405 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

உலகளவில் கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதன்படி அமெரிக்காவில் 69,25,941-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், இதுவரை 2,03,171 பேர் தொற்று பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். அதையடுத்து இந்தியா தொற்று பாதிப்பில் 53,05,475 பாதிப்புகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது, அதே நேரத்தில் உயிரிழப்பு 84,372 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பை பொறுத்தவரை, பிரேசில் 44,97,434 பாதிப்புகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. ரஷியாவில் 10,91,186 பேரும், பெரு 7,50,098, கொலம்பியா 7,43,945, மெக்சிகோ 6,88,954, தென்னாப்பிரிக்கா 6,57,627, ஸ்பெயின் 6,40,040, அர்ஜென்டினா 6,13,658, பிரான்ஸ் 4,67,421, சிலி 4,42,827, ஈரான் 4,16,198, இங்கிலாந்து 3,88,412, பங்களாதேஷ் 3,45,805, சவுதி அரேபியா 3,28,720, ஈராக் 3,11,690, பாகிஸ்தான் 3,04,386, துருக்கி 2,99,810, இத்தாலி 1,10,217, கஜகஸ்தானில் 1,07,134 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக  புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மதங்களுக்கு மரியாதை கொடுப்பவர் மோடி: ராஜ்நாத் சிங்

இது அதிதி ஆட்டம்!

திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் எல்லை ஊடுருவல்! : அமித்ஷா | செய்திகள்: சிலவரிகளில் | 23.04.2024

சிஎஸ்கே பேட்டிங்; ரச்சின் ரவீந்திரா அணியில் இல்லை!

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய மிட்செல் மார்ஷ்!

SCROLL FOR NEXT