உலகம்

பிரேசிலில் கரோனா பலி எண்ணிக்கை 1.35 லட்சத்தைக் கடந்தது

DIN



ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 858 பேர் உயிரிழந்ததை அடுத்து நாட்டின் தொற்று பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,35,857 கடந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகரித்து வரும் கரோனா பாதிப்புகளால் பல்வேறு நாடுகள் தவித்து வருகின்றன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா இறப்புகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

இந்நிலையில், சனிக்கிழமை காலை நிலவரப்படி, பிரேசிலில் கரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 857 ஆக உயர்ந்துள்ளது. பிரேசில் தினசரி இறப்புகளின் எண்ணிக்கையை குறைந்து வருகிறது. நாட்டில் மொத்த உயிரிழப்புடன் ஒப்பிடும்போது கடந்த 14 நாள்களில் உயிரிழப்பு விகிதம் 9 சதவீதமாக உள்ளது. 

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 39,797 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 44,97,434 ஆக உயர்ந்துள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கையும் குறைந்து வருகிறது, கடந்த இரண்டு வாரங்களை விட தொற்று பாதிப்பு 22 சதவீதம் குறைந்துள்ளது.

தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை 37,89,139 பேர் குணமடைந்துள்ளனர், தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் 5,72,438 பேர்களில் 8,318 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

பிரேசிலில் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமான சாவ் பாலோவில் 9,24,532 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இதுவரை 33,678 பேர் உயிரிழந்துள்ளனர், ரியோ டி ஜெனிரோவில் 2,49,798 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 17,575 பேர் உயிரிழந்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

திருமகள்.. பூஜா ஹெக்டே!

SCROLL FOR NEXT