உலகம்

கரோனா வைரஸை கொல்லும் அல்ட்ராவைலட் ஒளி

18th Sep 2020 05:48 PM

ADVERTISEMENT


அல்ட்ராவைலட் ஒளிக்கற்றை மூலம் மனிதர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல், கரோனா வைரஸைக் கொல்ல முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கரோனா வைரஸைக் கொல்ல பல்வேறு முன்முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், மருத்துவமனை போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களில் அல்ட்ராவைலட் ஒளிக்கற்றைப் பயன்படுத்தி கரோனா தொற்றை அழிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

அமெரிக்க மருத்துவ இதழில் இது தொடர்பான ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அந்த கட்டுரையில், கதிர் அலையின் நீளம் 222 நானோமீட்டர்களைக் கொண்ட அல்ட்ராவைலட் ஒளி மூலம் கரோனா வைரஸை கொல்ல முடியும், இது மனித உடலை ஊடுருவாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT