உலகம்

பாகிஸ்தானில் புதிதாக 752 பேருக்கு கரோனா

DIN

பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 752 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக 9 பேர் உயிரிழந்தனர்.

பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் பாகிஸ்தானில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 752 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,04,386-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு 6,295 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 579 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

புதிதாக 9 பேர் உயிரிழந்ததால், கரோனா தொற்றால் மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,408-ஆக அதிகரித்துள்ளது. 

அதிகபட்சமாக சிந்து பகுதியில் 1,33,125 பேரும், பஞ்சாபில் 98,142 பேரும், கைபர் பக்துன்க்வாவில் 37,242 பேரும், இஸ்லாமபாத்தில் 16,033 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த 24 மணிநேரத்தில் 33,865  பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 3,090,660 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது'' இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT