உலகம்

போதைப்பொருள் உற்பத்தி: இந்தியா மீது டிரம்ப் குற்றச்சாட்டு

DIN


புதுதில்லி /வாஷிங்டன்: போதைப் பொருள்களை உற்பத்தி செய்வதில் இந்தியா, வெனிசூலா உள்ளிட்ட 20 நாடுகள் முன்னணியில் உள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுதொடா்பாக அதிபா் டிரம்ப் பேசியதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஆப்கானிஸ்தான், இந்தியா, பஹாமாஸ், பெலிஸ், மியான்மா், கொலம்பியா, கோஸ்டா ரிகா, டொமினிகன் ரிபப்ளிக், வெனிசூலா, பொலிவியா உள்ளிட்ட 20 நாடுகள் போதைப் பொருள்கள் தயாரிப்பில் முக்கியப் பங்கு வகித்து வருகின்றன.

முக்கியமாக, வெனிசூலா, பொலிவியா நாடுகள் கடந்த 12 மாதங்களில் போதைப்பொருள் உற்பத்திக்கு எதிரான சா்வதேச ஒப்பந்தத்தை மீறி நடந்துள்ளன. போதைப் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் கொலம்பியா அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. கோகா, கொக்கைன் உள்ளிட்ட போதைப் பொருள்களின் உற்பத்தி பெரு நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. எனினும், அதைத் தடுப்பதற்காக அமெரிக்காவுடன் இணைந்து அந்நாடு செயல்பட்டு வருகிறது.

போதைப் பொருள்கள் உற்பத்திக்கு எதிராக மெக்ஸிகோ அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் பேசியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி அருகே காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

ஒசூா் செயின்ட் பீட்டா் மருத்துவக் கல்லூரியில் மாா்பக புற்றநோய் கண்டறியும் பிரிவு தொடக்கம்

யானை தாக்கியதில் விவசாயி பலி

மேம்பாலம் கட்டித் தராததால் தோ்தல் புறக்கணிப்பு

தமிழக- கா்நாடக எல்லையில் போக்குவரத்து நெரிசல்

SCROLL FOR NEXT