உலகம்

சிங்கப்பூர்: மேலும் 27 பேருக்கு பாதிப்பு

17th Sep 2020 01:16 AM

ADVERTISEMENT

சிங்கப்பூர்: சிங்கப்பூரில், மேலும் 27 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:


கடந்த 24 மணி நேரத்தில் 27 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.  புதிதாக கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவர்களில் 2 பேருக்கு மட்டுமே சமுதாயப் பரவல் மூலம் அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. 


எஞ்சியவர்களில் பெரும்பான்மையானவர்கள் பணியாளர் குடியிருப்புகளில் தங்கியுள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ஆவர். மேலும், புதிய கரோனா நோயாளிகளில் வெளிநாடுகளிலிருந்து வந்திருந்த இருவர் அடங்குவர்.
இத்துடன், நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57,515}ஆக உயர்ந்துள்ளது.
புதன்கிழமை நிலவரப்படி, நாட்டில் அந்த நோய்த்தொற்றுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 27}ஆக உள்ளது. இதுவரை 56,884 பேர் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர். 604 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT