உலகம்

ரஷியாவில் கரோனா பலி 19 ஆயிரத்தைத் தாண்டியது!

17th Sep 2020 02:04 PM

ADVERTISEMENT

ரஷியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், இந்தியாவைத் தொடர்ந்து ரஷியா 4 ஆம் இடத்தில் உள்ளது. 

இந்நிலையில், ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, 

நாட்டில் புதிதாக 5,762 பேருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 10,85,281 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 144 பேர் உள்பட இதுவரை 19,061 பேர் உயிரிழந்துள்ளனர்.

ADVERTISEMENT

அதேநேரத்தில் தற்போதுவரை 8,95,868 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,754 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 2,30,069 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 4.17 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT