உலகம்

உலகளவில் 3 கோடியைத் தாண்டிய கரோனா பாதிப்பு

17th Sep 2020 08:06 AM

ADVERTISEMENT

உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியைத் தாண்டியுள்ளது. 

சீனாவில் கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக அந்த வைரஸால் உலக நாடுகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. இன்னும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஊரடங்கு தொடர்கிறது. இந்த நிலையில் உலக அளவில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3 கோடியைத் தாண்டியுள்ளது. 

வியாழக்கிழமை காலை நிலவரப்படி உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,00,30,839 ஆக உள்ளது. பலியானோர் எண்ணிக்கை 9,45,051 ஆக உள்ளது. கரோனா பாதித்த 3 கோடி பேரில் 2.17 கோடிப் பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது 72,87,870 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின்ல 61,223 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். 

உலகளவில் கரோனா பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 68,28,301 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,01,348 பேர் பலியாகியுள்ளனர். இதற்கு அடுத்தடுத்த இடத்தில் இந்தியா, பிரேசில், ரஷியா உள்ளிட்ட நாடுகள் உள்ளன. அந்த வகையில் இந்தியாவில் 5,115,893, பிரேசிலில் 44,21,686 பேரும், ரஷியாவில் 10,79,519 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இதனிடையே செப்டம்பர் மாதத்தில் உலகிலேயே அதிக அளவில் கரோனா பாதிப்பு, பலி இந்தியாவில் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது. 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT