உலகம்

ஜப்பான் பிரதமராக தேர்வான யோஷிஹிடே சுகாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

16th Sep 2020 01:42 PM

ADVERTISEMENT

புது தில்லி: ஜப்பானின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள யோஷிஹிடே சுகாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜப்பான் பிரதமராக இருந்த ஷின்ஸோ அபே உடல்நலக் குறைவால் பதவியிலிருந்து விலகுவதாக கடந்த மாதம் அறிவித்தாா். அதையடுத்து, கட்சியின் புதிய தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் கடந்த வாரம் நடைபெற்றது. தேர்தலில் ஜப்பான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட யோஷிஹிடே சுகாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது  சுட்டுரைப் பக்கத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் பகிர்ந்துள்ள பதிவில், “ஜப்பானின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள யோஷிஹிடே சுகாவுக்கு உளமார்ந்த வாழ்த்துகள். நமது சிறப்பான ஆக்கப்பூர்வ மற்றும் உலகளாவிய கூட்டாண்மையுடன், நாம் இருவரும் சேர்ந்து புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லும் வாய்ப்பை எதிர்நோக்குகிறேன்” என்று கூறியுள்ளார்.
 

Tags : pm modi japan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT