உலகம்

பாகிஸ்தானில் 96 % பேர் கரோனாவிலிருந்து மீண்டனர்

16th Sep 2020 03:25 PM

ADVERTISEMENT

 

பாகிஸ்தானில் கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 96 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர் என்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

தேசிய கட்டளை மற்றும் செயல்பாட்டு மையத்தின் (என்.சி.ஓ.சி) தகவலின்படி, 

பாகிஸ்தான் முழுவதும் இதுவரை 2,90,760 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து, குணமடைந்தோர் விகிதம் 95.93 ஆக உள்ளது. 

ADVERTISEMENT

தொற்று பாதித்த மொத்த எண்ணிக்கை 3,03,089 ஆக உயர்ந்துள்ள நிலையில், தற்போது 5,936 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 29,100 கரோனா சோதனைகள் மேற்கொண்டதில், 665 பேர் மட்டுமே கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும், மூச்சுத் தினறல் காரணமாக இறந்த நான்கு நபர்களில், மூன்று பேர் மருத்துவமனைகளிலும், ஒருவர் வீட்டிலும் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT