உலகம்

அமெரிக்காவில் இதுவரை 5.50 லட்சம் குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு

16th Sep 2020 09:00 AM

ADVERTISEMENT

அமெரிக்காவில்  இதுவரை 5,50,000 குழந்தைகள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக புதிய அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இங்கு நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், அமெரிக்காவில் கரோனா தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து இதுவரை சுமார் 5,50,000 குழந்தைகள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை சங்கத்தின் புதிய அறிக்கை தெரிவிக்கிறது. 

ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 10 வரை மட்டுமே 72,993 குழந்தைகள் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இரண்டு வாரங்களில் குழந்தைகளின் கரோனா பாதிப்பு 15% அதிகரித்துள்ளது. அமெரிக்க மக்கள் தொகையில் ஒரு லட்சம் குழந்தைகளுக்கு 729 என்ற கணக்கில் தற்போது தொற்று பரவல் உள்ளது. 

ADVERTISEMENT

மொத்தமாக கரோனா சிகிச்சை பெறுவோரில் 0.6 முதல் 3.6% வரை குழந்தைகள் உள்ளனர். மேலும் குழந்தைகளின் இறப்பு விகிதம் 0-0.3% வரை உள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. 

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, அமெரிக்காவில் மொத்த பாதிப்பு 66,03,509 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 195,727 பேர் உயிரிழந்துள்ளனர். 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT