உலகம்

பாகிஸ்தானில் 6 மாதங்களுக்குப் பிறகு கல்வி நிறுவனங்கள் திறப்பு

15th Sep 2020 11:41 AM

ADVERTISEMENT

பாகிஸ்தானில் ஆறு மாதங்களுக்குப் பிறகு கல்வி நிறுவனங்கள் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன.

கரோனா தொற்று காரணமாக பாகிஸ்தானில் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி முதல் பள்ளி,கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. தற்போது அந்நாட்டில் பாதிப்பு குறைந்த நிலையில் செப். 15 முதல் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

கடந்த வாரம் நடைபெற்ற மாகாண கல்வி அமைச்சர்களின் (ஐபிஇஎம்சி) மாநாட்டில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, இன்று முதல் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இன்று முதல் இயக்கப்படுகின்றன. இம்மாத இறுதியில் மற்ற வகுப்புகள் அனைத்தும் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக பிரதமர் இம்ரான் கான் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், மில்லியன் கணக்கான குழந்தைகள் நாளை பள்ளிக்கு வரவுள்ளனர். ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பாக பள்ளிக்குச் செல்வதை உறுதிப்படுத்துவது நமது முன்னுரிமை மற்றும் கூட்டுப் பொறுப்பு. பொது சுகாதார பாதுகாப்பு விதிகளுடன் பள்ளிகள் இயங்குவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார். 

ADVERTISEMENT

Tags : Pakistan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT