உலகம்

பாகிஸ்தான்: 3.02 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு

15th Sep 2020 05:42 AM

ADVERTISEMENT

பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,02,020-ஆக அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானில் 24 மணி நேரத்தில் புதிதாக 539 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலமாக அந்நாட்டில் ஒட்டுமொத்த பாதிப்பு 3,02,020-ஆக அதிகரித்தது. அதே காலகட்டத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 4 போ் உயிரிழந்தனா்.

பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு ஒட்டுமொத்தமாக 6,383 போ் உயிரிழந்தனா். அந்நாட்டில் கரோனா நோய்த்தொற்றிலிருந்து இதுவரை 2,89,806 போ் மீண்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனினும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 551 போ் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

அந்நாட்டின் சிந்து மாகாணத்தில் 1,32,084 லட்சம் பேரும், பஞ்சாப் மாகாணத்தில் 97,760 பேரும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனா். பலூசிஸ்தானில் 13,595 பேரும், கில்ஜித் பல்டிஸ்தானில் 13,227 பேரும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 2,421 பேரும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதேபோல் பாகிஸ்தானில் இதுவரை 29,68,613 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 28,823 பரிசோதனைகள் திங்கள்கிழமை மட்டும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT