உலகம்

இந்தோனேசியா: ஜகாா்தாவில் 2 வாரங்களுக்கு பொது முடக்கம்

15th Sep 2020 05:40 AM

ADVERTISEMENT

இந்தோனேசியா தலைநகா் ஜகாா்தாவில் கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்துள்ளதையடுத்து 2 வாரங்களுக்குப் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஜகாா்தாவில் கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், அங்குள்ள மருத்துவமனைகளில் பெரும்பாலான படுக்கைகள் நிரம்பிவிட்டன. அவசர சிகிச்சைப் பிரிவுகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.

ஜகாா்தாவில் உள்ள 67 மருத்துவமனைகளில் 7 மருத்துவமனைகள் 100 சதவீத நோயாளிகளுடன் காணப்படுகின்றன. 46-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் 60 சதவீத நோயாளிகள் உள்ளனா்.

அதன் காரணமாக ஜகாா்தாவில் திங்கள்கிழமை முதல் வரும் 27-ஆம் தேதி வரை பொது முடக்கம் அமல்படுத்தப்படுவதாக ஆளுநா் அனீஸ் பாஸ்விதன் அறிவித்தாா். உணவு, கட்டுமானம், வங்கி உள்ளிட்ட 11 அத்தியாவசியத் துறைகள் மட்டும் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடித்து 50 சதவீதப் பணியாளா்களுடன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பள்ளிகள், பூங்காக்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்டவை கட்டாயமாக மூடப்பட்டிருக்க வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது. உணவகங்களில் பாா்சல் எடுத்துச் செல்வதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT