உலகம்

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 65 லட்சத்தைக் கடந்தது!

14th Sep 2020 12:00 PM

ADVERTISEMENT

அமெரிக்காவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 65 லட்சத்தைத் தாண்டியது. 

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இங்கு நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, அமெரிக்காவில் மொத்த பாதிப்பு 65,01,904 ஆக அதிகரித்துள்ளது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,93,843 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து சுமார் 39 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

அதிகபட்சமாக கலிபோர்னியா மாகாணத்தில் 7,59,437  பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெக்சாஸ் மற்றும் புளோரிடா மாகாணத்தில் 6,60,000 பேரும், நியூயார்க்கில் 4,44,365 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

அமெரிக்காவில் மொத்த பாதிப்பு கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி 50 லட்சத்தையும், கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி 60 லட்சத்தையும் கடந்தது குறிப்பிடத்தக்கது. 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT