உலகம்

ரஷியாவில் ஒரேநாளில் மேலும் 5,509 பேருக்கு கரோனா தொற்று

14th Sep 2020 04:43 PM

ADVERTISEMENT

 

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,509 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இன்றைய கரோனா நிலவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,509 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 1,388 பேருக்கு (25.2 சதவிகிதம்) எந்தவித அறிகுறியும் இல்லாமல் தொற்றுப் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஷியாவில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,06,8,320 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

மாஸ்கோவில் மட்டும் 696 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  மேலும், ஒரேநாளில் 57 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 18,635 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2,475 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,78,700 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும், தொற்று பாதிக்கப்பட்டதில் இருந்து இதுவரை ரஷியாவில் 40.9 மில்லியன் பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT