உலகம்

ஆப்கனில் சாலையில் மறைத்து வைக்கப்பட்ட குண்டு வெடித்து ஐந்து ராணுவ வீரர்கள் பலி

14th Sep 2020 05:12 PM

ADVERTISEMENT

 

காபூல்: ஆப்கானிஸ்தானில் சாலையில் மறைத்து வைக்கப்பட்ட குண்டு வெடித்து ஐந்து ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் மேற்கு பத்கிஸ் மாகாணத்தின் அப்கமரி மாவட்டத்தில் உள்ளது தேஹிஸ்தன் என்னும் பகுதி. இந்தப் பகுதியில் ஞாயிறு மதியம் ராணுவ வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் பயங்கரவாதிகள் மறைத்து வைத்திருந்த குண்டு வெடித்து, ஐந்து ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

இந்தத் தகவலை மாகாண கவுன்சில் உறுப்பினர் முஹம்மத் நசிர் நசாரி மற்றும் பத்கிஸ் மாகாணத்தின் துணை ஆளுநர் பைஸ் முஹம்மத் மிர்சாததா இருவரும் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால் மேற்கொண்டு தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தானில் நிலவும் உள்நாட்டு வன்முறைச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கடந்த சனிக்கிழமையன்று தோஹாவில் உள்நாட்டு அளவிலான பேச்சுவார்த்தை துவங்கியதில் இருந்து, மேற்கு பத்கிஸ் மாகாணத்தில் மட்டும் காவல்துறை மற்றும் ராணுவத்தைச் சேர்ந்த 31 பேர் வன்முறைச் சம்பவங்களில் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தப் பிரதேசத்தில் செயல்பட்டு வரும் தலிபான் குழுவினரிடம் இருந்து இதுவரை எந்த ஒரு எதிர்வினையும் இதுதொடர்பாக வெளியாகவில்லை.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT