உலகம்

கரோனாவால் வறுமை நிலையில் மேலும் தாக்கம் ஏற்படும்: ஐ.நா.

11th Sep 2020 03:04 PM

ADVERTISEMENT

ஜெனிவா: கரோனா பெருந்தொற்று தற்போது ஏற்படுத்தியுள்ள வறுமை நிலையில் மேலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஐக்கிய நாடுகள் அவை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மக்களை வறுமையிலிருந்து காக்க அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பேசிய ஐ.நா. அவையின் மனித உரிமைகள் ஆணையத்தின் வறுமை மற்றும் மனித உரிமைகளுக்கான சிறப்பு அறிக்கையாளரும், பெல்ஜியம் நாட்டை சேர்ந்த சட்ட அறிஞருமான ஆலிவர் டி செட்டர், ''சமூகப் பாதுகாப்பு வலையில் ஏராளமான துளைகள் உள்ளன. சமூகப் பாதுகாப்பு போதுமானதாக இல்லை.

இந்த தற்போதைய நடவடிக்கை மிகவும் குறுகிய கால நடவடிக்கையாகும். வருமானமும் போதிய அளவு இல்லாததால் பலதரப்பட்ட மக்கள் கீழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

ஐ.நா. பொது அவையில் உலக நாடுகளின் தலைவர்களுக்கானதாக இந்த கூற்று பார்க்கப்படுகிறது. உலக மக்களுக்கு ஏற்பட்டுள்ள வறுமை நிலையை தடுத்து நிறுத்தவும், சமநிலையற்ற தன்மையை ஒழிக்கவும் திட்டங்களை வகுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ADVERTISEMENT

1930களில் பெரும் மந்தநிலைக்குப் பின்னர் அமைதி காலங்களில் தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி முன்னோடியில்லாதது. தற்போது ஏற்பட்டுள்ள வறுமையால் உலகம் முழுவதும் உள்ள 176 மில்லியன் மக்கள் 3.20 டாலருக்கும் குறைவான வருவாயுடன் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். 

மக்களுக்கு உதவுவதற்காக அரசு சார்பில் நலத்திட்டங்களும் உருவாக்கப்படுகின்றன. எனினும் அவை இணையம் மற்றும் கல்வியறிவு போன்ற காரணிகளால் முழுமையாக வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களை சென்றடைவதில்லை.

இதனால் தங்களிடம் உள்ள சொத்துக்களில் சிலவற்றை விற்பனை செய்து அதன் மூலம் வரும் வருவாயைக் கொண்டு வாழ்வாதாரத்தை நடத்துகின்றனர். இந்த வறுமைநிலை மேன்மேலும் கடும் தாக்கங்களையே ஏற்படுத்தும்'' என்று அவர் கூறினார்

ADVERTISEMENT
ADVERTISEMENT