உலகம்

ரஷியாவில் கரோனா சிகிச்சையில் 2.09 லட்சம் பேர் உள்ளனர்

11th Sep 2020 03:14 PM

ADVERTISEMENT

ரஷியாவில் மேலும் 5,504 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, மொத்த பாதிப்பு 10,51,874 ஆக அதிகரித்துள்ளது. 

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், இந்தியாவைத் தொடர்ந்து ரஷியா 4 ஆம் இடத்தில் உள்ளது. 

இந்நிலையில், ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, 

நாட்டில் புதிதாக 5,504 பேருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 10,51,874 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 102 பேர் உள்பட இதுவரை 18,365 பேர் உயிரிழந்துள்ளனர்.

ADVERTISEMENT

அதேநேரத்தில் தற்போதுவரை 8,68,107 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,734 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்றைய நிலவரப்படி 2,09,000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 3.99 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 

தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 698 பேர் உள்பட இதுவரை 2,69,777 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT