உலகம்

பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்தது

11th Sep 2020 12:43 PM

ADVERTISEMENT

பாகிஸ்தானில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது.

கரோனா பெருந்தொற்று பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. அந்தவகையில் பாகிஸ்தானில் கரோனா பரவல் அதிகரித்துள்ளது. 

பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 548 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 300,371-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 5,795 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 535 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

கரோனா தொற்றிலிருந்து 2,88,206 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5 பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு 6,370-ஆக அதிகரித்துள்ளது.


28,79,655 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை  கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் அதிக அளவாக சிந்து பகுதியில் 1,31,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பஞ்சாபில் 97,533 பேரும், கைபர் பதுன்க்வாவில் 36,823 பேரும், இஸ்லாமாபாத்தில் 15,832 பேரும், பலூசிஸ்தானில் 13,282 பேரும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 2,366 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT