உலகம்

அமெரிக்காவில் கரோனா பரிசோதனைகள் குறைப்பு

11th Sep 2020 03:55 PM

ADVERTISEMENT

அமெரிக்காவில் கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் புதிதாக கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை முன்பை விட குறைந்து வருவதற்கு பரிசோதனைகள் குறைக்கப்பட்டதே காரணம் என்று கூறப்படுகிறது. 

ஜேர்னல் நேச்சர் கம்யூனிகேஷன் என்ற ஆய்வு பத்திரிகையில் அமெரிக்க கரோனா பரிசோதனை குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பொதுசுகாதாரப் பள்ளி மற்றும் கலிபோர்னியா பெர்க்கெலே ஆகிய நிறுவனங்கள் இந்த ஆய்வை மேற்கொண்டன.

ADVERTISEMENT

இதில் கரோனா பெருந்தொற்றால் அமெரிக்காவில் கடந்த சில நாள்களாக பதிவாகி வந்த கரோனா எண்ணிக்கையை விட தற்போது பாதிவாகி வரும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கரோனா பரிசோதனைகளை கட்டுப்படுத்தியதே இதற்கு காரணமாக உள்ளது. 

கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதிவரை 6.4 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு கரோனா பாதிப்பு பதிவாகியிருந்தது. ஆனால் 7,21,245 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வந்தனர்.

ஜான் ஹோம்கின்ஸ் பல்கலைக்கழகம் சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி, 63,97,245 கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 1,91,791 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்ட மற்றொரு ஆய்வில் இந்த ஆண்டு முடியும் வரை மாதந்தோறும் 200 மில்லியன் பரிசோதனைகளை அமெரிக்க அரசு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கரோனா அறிகுறியற்ற நபர்கள் பலர் உள்ளதாகவும், அவர்களை முறையான பரிசோதனைகள் மூலமே கண்டறிந்து சிகிச்சையளிக்க முடியும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT