உலகம்

உலகளவில் கரோனா தொற்று பலி 9.13 லட்சத்தை கடந்தது

11th Sep 2020 08:18 AM

ADVERTISEMENT


வாஷிங்டன்: உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,13,908 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 2,83,23,788 கோடியை எட்டியுள்ளது. 

உலக நாடுகளில் கரோனா நோய்த்தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, உலக அளவில் மொத்த கரோனா பாதிப்பு  2,83,23,788 கோடியாக உள்ளது. பலியானோர் எண்ணிக்கை 9,13,908 ஆக உள்ளது.  கரோனா பாதித்த 2,83,23,788 பேரில் 2,03,39,066 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

உலகளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு 65,88,163 பேரும், இந்தியாவில் 45,59,725 பேரும், பிரேசிலில் 42,39,763 பேரும், ரஷியாவில் 10,46,370 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்பை பொறுத்தவரை பிரேசிலை பின்னுக்கு தள்ளி இந்தியா இரண்டாவது இடத்துக்கு வந்துள்ளது. 

உலகம் முழுவதும் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,03,39,066 ஆக உள்ளது. தற்போது 70,70,814 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 60,753 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT