உலகம்

ஜெர்மனியில் புதிதாக 1,484 பேருக்கு கரோனா தொற்று

11th Sep 2020 12:42 PM

ADVERTISEMENT

 

 

ஜெர்மனியில் ஒரேநாளில் புதிதாக 1,484 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளது. 

தினசரி பாதிப்பு குறித்து அந்த நாட்டு சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவலில், 

ADVERTISEMENT

நாட்டில் கரோனா பாதிப்பு கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகிறது. அந்தவகையில், ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,484 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 2,56,850 ஆக உயர்ந்துள்ளதாக ராபர்ட் கோச் நிறுவனம் (ஆர்.கே.ஐ) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

நோய்த் தொற்று பாதித்து இதுவரை 2,30,000 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி 9,342 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT