உலகம்

கலிபோர்னியா காட்டுத் தீ: பலி எண்ணிக்கை 10-ஆக உயர்வு

11th Sep 2020 04:17 PM

ADVERTISEMENT

சான் பிரான்சிஸ்கோவின் வடகிழக்கில் ஏற்பட்ட காட்டுத்தீயால் மேலும் 7 பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு 10-ஆக அதிகரித்துள்ளது.

சான் பிரான்சிஸ்கோவின் வடகிழக்கில் ஏற்பட்ட காட்டுத்தீ மூன்று வாரங்களுக்கும் மேலாக எரிந்து வருகிறது. கலிபோர்னியாவின் வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் தீயில் கருகியுள்ளன. பலத்த காற்று வீசுவதால் சுற்றுப்புற பகுதிகளுக்கும் காட்டுத்தீ பரவி வருகிறது.

பெர்ரி கிரீக் பகுதிக்கு காட்டுத்தீ பரவிய நிலையில், அப்பகுதியில் 7 பேர் உயிரிழந்த நிலையில் கண்டறியப்படடுள்ளனர். கடந்த புதன் கிழமை பட் கவுண்டி பகுதியில் மூன்று பேர் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டன. இதனால் அப்பகுதிகளை சுற்றியுள்ள பகுதிகளில் மேலும் சிலர் சிக்கியுள்ளனரா என்ற கோணத்தில் தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது இறந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பட் கவுண்டி, யூபா மற்றும் பிளம்ஸ் கவுண்டி ஆகிய பகுதிகளில் 2,47,358 ஏக்கர் பரப்பளவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 23 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கலிபோர்னியா வரலாற்றில் மிகப்பெரிய காட்டுத்தீயாக இது உருவெடுத்துள்ளது.

ADVERTISEMENT

கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து 3.1 மில்லியன் ஏக்கர் பரப்பளவிலான காட்டுப்பகுதி தீயில் கருகியுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு ஏற்பட்ட காட்டுத்தீயால்  1.9 மில்லியன் ஏக்கர் பரப்பளவிலான காட்டுப்பகுதி தீயில் கருகியது குறிப்பிடத்தக்கது.
 

Tags : காட்டுத்தீ
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT