உலகம்

ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: இருவர் பலி

11th Sep 2020 08:01 PM

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தானில் காந்தஹாரில் நடந்த குண்டுவெடிப்பில் பொதுமக்கள் இருவர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் காந்தஹார் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை சாலையோர குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. ஷா வாலிகோட் மாவட்டத்தின் அஞ்சர்கி பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் பொதுமக்கள் இருவர் பலியானதாக ஆப்கான் அரசு செய்தி வெளியிட்டுள்ளது.

சமீப காலங்களில் பொதுமக்கள் மீதான சாலையோர குண்டுவெடிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தலிபான் தீவிரவாத இயக்கத்தை அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இதுவரை தலிபான் இயக்கம் குண்டுவெடிப்பிற்கு பொறுப்பேற்கவில்லை.

இந்நிலையில் தலிபான் மற்றும் ஆப்கான் அரசாங்க தூதுக்குழு இடையே சனிக்கிழமை அமைதி பேச்சுவார்த்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

Tags : Afghanistan
ADVERTISEMENT
ADVERTISEMENT